தமிழினம் கருவறுக்கப்பட்ட நாளான மே மாதம் 18 ஆம் திகதியை பேதங்கள் அனைத்தையும் தவிர்த்து உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது, தமிழினம் சிறீலங்கா அரசாலும் அதன் நேச நாசகார சக்திகளாலும் துடிக்கத்துடிக்க கொன்றொழிக்கப்பட்ட நாளை, மருந்தையும் உணவையும் தடைசெய்து தமிழரைத் தலைவணங்க வைக்க முயன்று, அதில் தோற்றுப்போய் யுத்த சூனிய வலயங்களுள் மக்களை ஒன்றுகூட்டி உலகினால் மனித குலத்துக்கு ஒவ்வாததென தவிர்த்தொதுக்கப்பட்ட போர் முறைகளையும் கொடிய இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தி எம்மினத்தை கருவறுத்த நாளை, பேதங்கள் அனைத்தையும் தவிர்த்து, தமிழர்கள் என்கின்ற நிமிர்வுடன் ஒன்றிணைந்து நினைவேந்த அனைவரையும் பணிவுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்புக் குழு அழைத்து நிற்கின்றது. இது தொடர்பான திட்டமிடல் கூட்டங்கள் எதிர்வரும் நாள்களில் இடம்பெறும் என்றுள்ளது.
Discussion about this post