எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்புள்ளதாகத் தெரியவருகின்றது.
எனினும் அமைச்சர்களின் எண்ணிக்கையில் இழுபறி நிலையொன்று ஏற்பட்டுள்ளதாலேயே அதுகுறித்து உறுதியான முடிவை எடுக்க அரசாங்கம் தயங்குவதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பாக அலி சப்ரி நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர், நீதியமைச்சர் பதவியை எவருக்கு வழங்குவது தொடர்பில் பாரதூரமான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன் நீதியமைச்சர் பதவியை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூக்கு வழங்க வேண்டும் என ஒரு தரப்பினர் ராஜபக்சக்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post