இறம்பொடை நீர்வீழ்ச்சியில் மூழ்கிக் காணாமல் போயிருந்த வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதியின் உடல்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா நெடுங்கேணியைச் சேர்ந்த 18 வயதான பு.வினோதினி, வவுனியாவைச் சேர்ந்த 21 வயதான விதுசன் ஆகியோரின் உடல்களே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இறம்பொடை நீர்வீழ்ச்சியில் வவுனியாவைச் சேர்ந்த மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர். அவர்களில் ஒரு யுவதியின் உடல் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
வவுனியாவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் ஊழியர்கள் மலையகத்துக்குச் சுற்றுலா சென்றபோதே இந்த அனர்த்தம் நடந்தது.
Discussion about this post