யாழ்ப்பாணம், கைதடி வடக்கில் மின்சாரம் தாக்கிக் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவ நேரத்தில் வீட்டில் வேறு எவரும் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
கு.பரமேஸ்வரி எனும் 59 வயதுப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் உள்ளவர்கள் ஆலயத்துக்குச் சென்ற சமயம், பரமேஸ்வரி தொலைக்காட்சியை இயக்க முயன்றுள்ளார் என்றும், அப்போது மின் தாக்கத்துக்கு இலக்கானார் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் உடல் சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post