ஜா-எல பிரதேசத்தில் பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கி வைத்திருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அனுமதிப் பத்திரம் (லைசென்ஸ்) இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் மற்றும் டீசல் இருப்புக்கள் இருந்தபோதும் கடந்த நான்கு நாள்களாக அவை மக்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தைச் சோதனையிட்டபோது, எரிபொருள் இருப்புக்கள் பதுக்கி வைத்திருந்தமையை கண்டறிந்த அதிகாரிகள் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கான அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்துள்ளனர்.
Discussion about this post