தங்கொடுவ மற்றும் வென்னபுவ ஆகிய பகுதிகளில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற 47 மற்றும் 51 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் இரண்டு நாள்களாக டீசல் பெறுவதற்காக தங்கொடுவ நகரில் வரிசையில் காத்திருந்த கோனவில பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் மயங்கி விழுந்து தங்கொடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு இறந்தவர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து சாரதி என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வென்னபுவ பகுதியில் எரிபொருள் கொள்வனவு செய்ய வரிசையில் நின்ற 51 வயதுடைய மற்றொருவரும் உயிரிழந்துள்ளார்.
இதற்கு முன்னரும் ஐவருக்கு மேல் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளில் காத்திருந்தபோது மயங்கி வீழ்ந்து உயிரிழந்திருந்தனர்.
Discussion about this post