மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் 3 மாத காலம் மிகவும் சவாலான காலமாக இருக்கும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இலங்கை மருத்துவ சங்கம் பல வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாது என்று தெரிவித்தது.
சத்திர சிகிச்சைகளுக்கு முன்னர் வழங்கப்படும் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோயாளி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்னர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் மருந்து பொருள்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மருந்துப் பொருள்களின் தட்டுப்பாட்டால், நாட்டில் பேரழிவு ஒன்று ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது என்று இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
Discussion about this post