சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்த முடிவு செய்து இருந்ததாகவும் எனினும், இரண்டு அமைச்சர்கள் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியுள்ளது என்று தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 4 ஆம் திகதி அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுவதற்கு முன்னர் பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் தனது முடிவை அறிவிக்கவிருந்தார்.
அப்போது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பிரசன்ன ரணதுங்க உட்பட சிலர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டதை அடுத்து பிரதமர் தனது முடிவை மாற்றிக்கொண்டார் என்று கூறப்படுகிறது.
பிரதமர் பதவியில் இருந்து விலகினால், தானும் அரசியலில் இருந்து விலகுவேன் என்று பிரசன்ன ரணதுங்க கூறினார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதையடுத்து பிரதமர் பதவி விலகும் முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். இதன் பின்னர் பிரதமரை தவிர ஏனைய அனைவரும் பதவி விலகியிருந்தார்.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக பெருந்திரளான மக்கள் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், அரசாங்கம் பல்வேறு வகையிலும் திணறி வருகிறது.
Discussion about this post