தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு இம்மாதம் 13, 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன் பின்னரான காலப்பகுதியில் மிகக்குறைந்த நேரத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி ரோஹாந்த அபேசேகர தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு பாதிப்பு ஏற்படாதவாறு மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post