நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியால் இளையோர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அண்மைய நாள்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு கடவுச் சீட்டுப் பெறும் இளைஞர்களின் எண்ணிக்கை 40 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அதேநேரம், நாடு முழுவதும் வீடுகள் மற்றும் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது என்றும், பலர் வெளிநாடு செல்வதற்காகவே தங்கள் சொத்துக்களை விற்பனை செய்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
அதேவேளை, நாட்டில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குப் பயணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றும், அது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவித்தன.
Discussion about this post