இலங்கைக் கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரையும் 24 கோடி ரூபா காசுப் பிணையில் செல்ல கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம்.
எல்லைத்தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மீனவர்களை பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், 12 மீனவர்களுக்கும் தலா 2 கோடி ரூபா பிணைத் தொகையை அறிவித்தது.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் கைரேகைப் பதிவுகளைக் கொண்டு, இவர்கள் முன்னரும் எல்லைதாண்டிய குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனரா என்பது தொடர்பில் ஆராயுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Discussion about this post