அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நாட்களில் உற்சவங்கள், கூட்டங்கள், பொதுமக்கள் சந்திப்பு ஆகியவற்றில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகின்றனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமையல் எரிவாயு, டீசல்,பெற்றோல் மற்றும் மின்சாரம் போன்ற பிரச்சனைகள் காரணமாக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என அச்சமுற்று அவர்கள் இவ்வாறு உற்சவங்கள், மக்கள் சந்திப்பு, கூட்டங்கள் ஆகியவற்றுக்குச் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் வீடு பொதுமக்களால் சுற்றிப் வளைக்கப்பட்டதை அடுத்து அமைச்சர்கள் எம்பிக்களுக்கு இந்த அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நாளாந்தம் டீசல், பெட்ரோல், எரிவாயு, மண்ணெண்ணெய், பால்மா போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.
இதை எதிர்த்து நாட்டில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post