யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதியின் நீச்சல் தடாகத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு அந்த விடுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் தங்கியிருந்தனர் என்றும் அவர்களில் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.
இன்று காலை விடுதி நிர்வாகத்தினர் இளைஞர் ஒருவரின் சடலம் நீரில் மிதப்பதை அவதானித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விடுதியில் தங்கியிருந்தவர்கள் நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் நீச்சல் தடாகத்தில் நீராடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இளைஞருடன் தங்கியிருந்தவர்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை.
இளைஞருடன் மேலும் பலர் நீராடியிருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில், இளைஞரின் உயிரிழப்பு விபத்தா? கொலையா? என்பது தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Discussion about this post