தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வே முக்கியமானது என்று இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இலங்கை வந்து சென்றுள்ள அவர் இலங்கையில் உள்ள இந்திய ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை, காணிப் பிரச்சினை, காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரம் மற்றும் அபிவிருத்தி ஆகிய நான்கு விடயங்களும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிரச்சினைகள் என அவர் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் நல்லிணக்கம் மற்றம் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு வழிவகுக்கும் என இந்திய வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆனால், அது இந்த விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களின் முடிவாக அமையாது எனவும் அரசியல் தீர்வே முக்கியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Discussion about this post