எதிர்வரும் 3ஆம் திகதி மாபெரும் அரச எதிர்ப்புப் போராட்டத்துக்கு சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்தத் தினத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயினும் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எட்டவில்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபரான அஜித் ரோஹண அறிவித்துள்ளார்.
மிரிஹான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மிரிஹானவில் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டிருந்தது.
Discussion about this post