நாட்டில் தற்போது அமுலில் உள்ள மின்வெட்டு நேரம் எதிர்வரும் ஏப்ரல் 02 ஆம் திகதிக்கு பிறகு 4 மணிநேரமாக குறைக்கப்படும் – என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ. பெர்டினாண்டோ தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” எதிர்வரும் 02 ஆம் திகதி டீசல் தொகையொன்று வருவதாகவும், அதனை மின்சார சபைக்கு வழங்குவதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. எனவே, எமக்கு டீசல் கிடைக்கப்பெற்ற பின்னர், நாட்டில் தற்போது அமுலில் உள்ள மின்வெட்டு நேரத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி 4 மணிநேரத்துக்கும் குறைவான நேரமே மின்வெட்டு அமுலில் இருக்கும்.
அத்துடன், எமக்கு தொடர்ச்சியாக எரிபொருள் கிடைக்கப்பெறும்பட்சத்தில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிவராது. இதுதான் உண்மை நிலைவரம். ” – என்றும் அவர் கூறினார்.
Discussion about this post