எதிர்வரும் சில நாள்களுக்கு டீசல் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது என்று இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தானம் கைவிரித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நிற்பதில் பயனில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமி வீரசிங்க தெரிவித்தார்.
இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்குக் கிடைத்த எரிபொருள் மூலம் ஏப்ரல் மாதத்துக்கான பெற்றோல் மற்றும் டீசலையே பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
உலக சந்தையில் தற்போதுள்ள உயர் விலையில் தொடர்ந்து எரிபொருள் விற்பனை செய்தால், இந்த ஆண்டு எரிபொருள் கொள்வனவுக்காக 5 பில்லியன் டொலர் தேவை என்று சுமித் வீரசிங்க குறிப்பிட்டார்.
அதேவேளை, 37 ஆயிரத்து 500 மெற்றிக்தொன் டீசலுடன் கடந்த மூன்று நாள்களாகக் காத்திருக்கின்றது.
இந்தக் கப்பலுக்கான டொலர் செலுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்தன.
Discussion about this post