இன்று மாலையுடன் எரிபொருளில் இயங்கும் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகளும் நிறுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபைத் தகவல்கள் தெரிவித்தன.
நுரைச்சோலை அனல் மின் நிலையமும், நீர் மின் உற்பத்திக் கட்டமைப்புமே இயங்கும் நிலையில் உள்ளன என்று தெரியவருகின்றது.
இந்த இரு மின் உற்பத்திக் கட்டமைப்புக்களில் இருந்து ஆயிரத்து 200 மெகாவோட் மின்சாரத்தையே பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இது 10 மணித்தியாலங்களுக்கே போதுமானது என்றும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலைமையால் 14 மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Discussion about this post