மேஷம்
குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம்.எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
குடும்பத்தினர் மனம் விட்டுப் பேசுங்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
மிதுனம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
கடகம்
குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். ஆடை ஆபரணம் சேரும்.வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தி
யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.
சிம்மம்
சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
கன்னி
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
துலாம்
சமயோசிதமாக பேசி சாதிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.
விருச்சிகம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பு
களை ஏற்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.
தனுசு
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்
கும். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
மகரம்
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
கும்பம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராதுஎன்றிருந்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
மீனம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும்.வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள் புதிய உத்தியில் சில முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம் நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்
Discussion about this post