மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து சத்திர சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
அவசர சத்திர சிகிச்சைகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்படுகின்றன என்று வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் கண் சத்திர சிகிச்சைகள் மருந்துத் தட்டுப்பாட்டால் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
மருத்துப் பொருள்களை இறக்குமதி செய்வதில் உள்ள நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைகள் வழங்குவதில் சிக்கல் நிலைமை தோன்றியுள்ளது எனறு தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post