இலங்கை மின்சார சபை, மத்திய வங்கி, நிதியமைச்சு போன்றவற்றை நேர்மையான திறமையானவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் நாட்டைக் காபந்து அரசாங்கமொன்று நிர்வகிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் தனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற முடியாது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. டீசல் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன.
இலங்கை மின்சார சபையின் நிர்வாகம் பயனற்றதாக மாறியுள்ளது. ஏப்ரல் மாதமளவில் இலங்கையின் மின்சார கட்டமைப்பு முறை முற்றாகச் செயல் இழக்கலாம்.
இலங்கை மின்சார சபை, மத்திய வங்கி, நிதியமைச்சு போன்றவற்றை நேர்மையான – திறமையானவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றார்.
Discussion about this post