நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு விரைவில் நிவாரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பத்திரமுல்லையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் கஷ்டம் நிலவினாலும் மக்களின் நிவாரணங்களை குறைக்க எதிர்பார்க்கவில்லை.
எவரும் விமர்சனங்களை முன்வைக்க முடியும். விமர்சனங்களை முன்வைக்கும் நபர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் போது அவற்றை செய்ய தவறுகின்றனர். வரலாற்று முழுவதும் இப்படியான சம்பவங்களை பார்க்க முடியும் என்றார்.
Discussion about this post