சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதை் தடுக்க நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச முயற்சித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நாடு நெருக்கடிக்குள் உள்ள நிலையில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, நாடாளுமன்றத்துக்கு வருவதைத் தவிர்த்து வருகின்றார். கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்கும் நோக்குடனே அவர் நாடாளுமன்றம் வர மறுக்கிறார் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இந்த நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. அதைத் தடுப்பதற்கு பஸில் ராஜபக்ச முயற்சித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
ஆயினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலையிட்டு, விவாதத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் என்று தெரிகின்றது. அதனால் நிதியமைச்சர் நாடாளுமன்றத்துக்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Discussion about this post