யாழ்ப்பாணம், உடுவிலில் வாள்வெட்டுக்கு இலக்கா குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
உடுவில் தெற்கைச் சேர்ந்த நாகராசா மணிமாறன் (வயது-51) என்பவரே காயடைந்துள்ளார்.
கடந்த வெள்ளிகிழமை இரவு வீட்டுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது என்றும், அதைத் தடுக்க முயன்ற வீட்டு உரிமையாளரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மானிப்பாய் பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post