உக்ரைனின் தலைநகர் கீவ்க்கு அருகே கலினிவ்கா கிராமத்தில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் கிடங்கு தாக்கி அழிக்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலையில் கடல் பகுதியில் இருந்து கப்பல் வழியாக காலிபர் ஏவுகணையை ஏவி ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதில் அந்த எண்ணெய்க் கிடங்கு அழிக்கப்பட்டது என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.
மத்திய உக்ரைனில் உள்ள ஆயுதப்படைகளின் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் அந்த எண்ணெய்க் கிடங்கில் இருந்தே வழங்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.
அதேநேரம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியின் நாஜி படைகளை ரஷ்ய துருப்புகள் வென்ற மே 9ஆம் திகதி, உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர விளாடிமிர் புடின் முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டு தோறும் மே 9ஆம் திகதியை போர் வெற்றி விழாவாக ரஷ்யா கொண்டாடி வரும் நிலையில், தற்போது, அதே நாளில் உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா திட்டமிடுகிறது.
Discussion about this post