அண்மையில் மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் திணைக்களத்தின் தலைவர் சாங்யோங் ரீ அந்தப் பதவியிலிருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளார்.
அனுபவமிக்க பொருளாதார நிபுணரான இவர் தென் கொரியாவின் மத்திய வங்கி ஆளுநராக பெயரிடப்பட்டதையடுத்து, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்காக இலங்கைக்கு வந்த சாங்யோங் ரீ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளையும் சந்தித்தார்.
பொருளியல் துறையில் இரண்டு கலாநிதிப் பட்டம் பெற்றுள்ள சாங்யோங் ரி, இதற்கு முன்னர் கொரிய மத்திய வங்கியின் ஆலோசகராகப் பணியாற்றியிருந்தார்.
Discussion about this post