உலக மக்கள் அனைவரும் ரஷ்யாவுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன. கடந்த ஒரு மாதமாக தொடரும் இந்த போரில் இராணுவ வீரர்கள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியப் படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
போர் தொடங்கி ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்யாவால் நடத்தப்படும் போர் உக்ரைனுக்கு எதிரானது மட்டுமல்ல, சுதந்திரத்துக்கு எதிரானது எனத் தெரிவித்து உக்ரைன் ஜனாதிபதி காணொளியை வெளியுறவித் துறை வெளியிட்டுள்ளது.
“உக்ரைன் நாட்டையும், சுதந்திரத்தையும் ஆதரிக்க அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், வீடுகளிலிருந்து அனைத்து மக்களும் இன்று தெருக்களுக்கு வாருங்கள். போரை நிறுத்த வலியுறுத்தும் அனைத்து உலக மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Discussion about this post