எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறியப்பட்டது என்று தெரிவித்த அவர், இன்னும் இரு நாள்களில் மக்களின் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.
தற்போது நிலவிவரும் தட்டுப்பாடு இன்னும் இரு நாள்களில் தீரும் என்று குறிப்பிட்ட அவர், மக்கள் எரிபொருளைச் சேமிப்பதாலேயே இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post