தற்போது நடைபெற்றுவரும் சர்வகட்சிக் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்த கருத்துக்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மன்னிப்புக் கோரினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னைய நல்லாட்சி அரசாங்கமே காரணம் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதற்குக் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டிய முன்னாள் பிரதமர ரணில் விக்கிரமசிங்க, இது அரசியல் பேசுவதற்கான இடமில்லை என்று சுட்டிக்காட்டினார்.
அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, மத்திய வங்கி ஆளுநரின் கருத்துக்காக மன்னிப்புக் கோரினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post