ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் தற்போது சர்வகட்சிக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
அந்தக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள கட்சிகள் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், இலங்கை மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
முன்னைய அரசாங்கமே இந்த நெருக்கடிகளுக்குக் காரணம் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துவரும் கருத்துகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
இளவரசன் விஜயன் இலங்கைக்கு வந்திருக்காவிட்டால் இந்தப் பிரச்சினையையே வந்திருக்காது என்று கூறுவதைப் போன்றதே, முன்னைய அரசாங்கமே இதற்குக் காரணம் என்று மத்திய வங்கி ஆளுநர் கூறுவது என்று ரணில் விக்கிரமசிங்க பதிலடி கொடுத்துள்ளார்.
Discussion about this post