சர்வகட்சி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அரசாங்கம் நிதிவிடயத்தில் வெளிப்படைதன்மையுடன் செயற்படுவதை தான்னால் காணமுடியவில்லை என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியம் இலங்கை தொடர்பாகச் சமர்பித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பிக்கவேண்டும் என்று கோரினார்.
அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் இறுதி அறிக்கை இன்னமும் எமக்குக் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
அதை மறுத்த ரணில் இல்லை ஏற்கனவே அவர்கள் அறிக்கையை வெளியிட்டுவிட்டார்கள் என குறிப்பிட்டார். இது தொடர்பான சந்தேகத்துக்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதி அறிக்கையை கோரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதற்கு சீற்றத்துடன் பதிலளித்த நிதியமைச்சர் என்னிடம் சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கை உள்ளது ஆனால் அது நகல்வடிவம் மாத்திரமே என்று கூறியதுடன், உங்களுக்கு நகல்வடிவ ஆவணம் வேண்டுமா என பஸில் ரணிலை பார்த்து கேட்டார்.
அதற்கு பதிலளித்த ரணில் உங்களால் முடியும் என்றால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள் என்று பதிலளித்தார். ஆனால் நிதியமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
Discussion about this post