அணு ஆயுதத் தாக்குதல்கள் பற்றி அதிகம் பேசப்படுகின்ற ஒரு காலம் மீண்டும் திரும்பியிருக்கிறது. கடந்த வெள்ளி இரவு அணு ஆயுதங்களைத் தாங்கிய நீண்ட இராணுவ வாகன அணி ஒன்று ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரைக் கடந்து சென்றுள்ளது என்ற தகவலை பிரிட்டிஷ் ஊடகங்கள் சில வெளியிட்டிருந்தன.
சுமார் ஆறு அணு ஆயுதங்கள் அந்த நீண்ட வாகன அணியில் பிரிட்டிஷ் றோயல் கடற்படையின் அணு ஆயுதக் களஞ்சியத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்ற உறுதி செய்யப்படாத தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புப் பெரும் போராக ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவலாம் என்ற அச்சம் அந்த நாடுகளில் காணப்படுகிறது.
ரஷ்ய அதிபர் புடின் தனது நாட்டின் அணு ஆயுதங்களை அல்லது பேரழிவு ஆயுதங்களை இயக்குகின்ற படைப் பிரிவைத் தயார்நிலையில் இருக்குமாறு பணித்திருக்கிறார். அதனையடுத்து அணு ஆயுதப் போர்ப் பதற்றம் எழுந்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் நெருக்கடி அணு ஆயுத மோதலாக விரிவடையக் கூடிய ஆபத்து இருக்கிறது என்று ஐ. நா. செயலாளர் நாயகம் அன்ரொனியோ குற்ரெஸ் அண்மையில் எச்சரித்திருந்தார்.
நடக்காது என்று ஒரு காலத்தில் நாங்கள் நினைத்திருந்த அணு ஆயுதப் போர் இப்போது சாத்தியத்தின் விளிம்புக்கு வந்துள்ளது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
Discussion about this post