மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் வாகனச் சாரதி நேற்று இரவு இனந்தெரியாதேரின் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இரவு 9 மணியளவில் சாரதியின் பிலியந்தலை, மாவிட்டரவில் உள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே சாரதியைக் கத்தியால் குத்தியுள்ளார்.
எபசிங்க கனிஷ்க என்ற 41 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த கனிஷ்க பிலியந்தலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டபோதும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
Discussion about this post