மக்கள் எதிர்பாராத அளவு மின்சாரக் கட்டணம் உயரக்கூடும் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர எச்சரித்துள்ளார்.
இன்று அல்லது நாளை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என்றும், அது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைப்படி, முன்னர் காணப்பட்டதை விடவும் கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கப்படும் என்று தெரிகின்றது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாள்களில் மின்சாரத்தைப் பயன்படுத்தாது மக்கள் மின்குமிழ்களையும், மின் விசிறியையும் பார்த்துக் கொண்டிருக்கும் நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, நேற்று (21) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால், மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக மின்சார சபை பேச்சு நடத்தி வருகின்றது என்று தெரிவித்திருந்தார்.
Discussion about this post