தற்போதுள்ள எரிவாயு இருப்புக்கள் இன்று (22) இரவு தீர்ந்துவிடும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
லிட்ரோவின் கெரவலப்பிட்டிய எரிவாயு முனையத்தில் இருந்து நேற்று இரவு வரை எரிவாயு விநியோகம் நடைபெறும் என்றும்,இன்று கிட்டத்தட்ட ஒரு லட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
3 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றி வரும் கப்பல் ஒன்று நேற்று (21) இரவு இலங்கை கடற்பரப்பை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்றும், அந்தக் கப்பல் வந்தால் மேலும் மூன்று நாள்களுக்கு எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மாதாந்தம் 35 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயு தேவைப்படுகின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போது மாதாந்தம் 10 ஆயிரம் மெற்றிக் தொன்னையே நிறுவனம் பெற்றுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
Discussion about this post