133 பேருடன் பயணித்த சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
மலைப்பாங்கான பகுதியில் போயிங் 737 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதால், காடுகளில் தீ பரவியுள்ளது என்று சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமானம் குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி பகல் 1:15க்கு புறப்பட்டு குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தது.
வுஜோ மாகாணத்தில் உள்ள டெங் கவுண்டி அருகே விமானம் விழுந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
குவாங்சி என்பது தென் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரானன குவாங்சோவின் அயல் மாகாணமாகும். விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானம் முற்றாக அழிந்துள்ளது என்றும் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர் என்றும் பிந்திய தகவல்கள் தெரிவித்தன.
Discussion about this post