அமெரிக்காவின் விஸ்கான் மாகாணத்தில் சிறுமி ஒருவரின் கழுத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கால் முட்டியை வைத்து நெரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
12 வயதுச் சிறுமி ஒருவரின் கழுத்திலேயே பொலிஸ் அதிகாரி கால் முட்டியை வைத்து நெரிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் காணப்படுகின்றன.
பொலிஸ் அதிகாரியின் இந்தச் செயற்பாட்டுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. சிறுமிக்கு ஆதரவாகவும், பொலிஸாருக்கு எதிராகவும் பலரும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
அதேவேளை, 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோர்ஜ் பிளாய்ட் என்பவரின் கழுத்தில் பொலிஸ் அதிகாரி கால் முட்டியை வைத்து நெரித்ததில் அவர் உயிரிழந்தார். அந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
Discussion about this post