அரச வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் முடங்கும் அபாய நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் பொருட்கள் பலவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் இந்த நிலைமையே காணப்படுகின்றது என்று அறிய முடிகின்றது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பதில் பணிப்பாளர் தெரிவித்தார்.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள அந்நியச் செலாவணிப் பிரச்சினையால் பல பொருள்களின் இறக்குமதிகள் தடைப்பட்டுள்ளன. அவற்றில் சுகாதாரத் துறை சார்ந்த பொருள்களும் அடக்கம்.
மருத்துவமனைகளில் நாளாந்தம் தேவைப்படும் பல பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அவை வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் சிகிச்சைகளை முன்னெடுப்பதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரம், வைத்தியசாலைகளிலும் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் சமைத்த உணவுகளை வழங்குவதிலும் வைத்தியசாலைகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன.
ஆயினும் இது தொடர்பில் சுகாதார அமைச்சோ, வைத்தியசாலை நிர்வாகங்களோ உத்தியோகபூர்வமாக எந்தக் கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.
Discussion about this post