தண்ணீர் வாளிக்குள் வீழ்ந்து ஒருவயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் நடந்துள்ளது.
புதுக்குடியிருப்பு கைவேலியைச் சேர்ந்த ஒரு வருடமும் மூன்று மாதங்களுமான மு.சியோன்ஷன் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
இரண்டைக் குழந்தைகளில் ஒன்றான சியோன்ஷன் விளையாடிக் கொண்டிருந்தபோது, மலசலகூடத்துக்குப் பயன்படுத்தப்படும் நீர் நிறைந்த வாளிக்குள் (கான்) தவறி வீழ்ந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post