முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் இன்று தனியார் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு இடையே பயணிகள் சேவையை மேற்கொள்ளும் தனியார் பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ் விபத்தில் சிக்கியபோது 40 வரையான பயணிகள் அதில் பயணித்துள்ளனர்.
விபத்தில் பலர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றை, இந்தத் தனியார் பஸ் முந்திச் செல்ல முயன்றது என்றும், அப்போது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது என்றும் தெரியவருகின்றது.
இந்த விபத்துத் தொடர்பாக முல்லைத்தீவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post