அரசாங்க மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட ஊழியர்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய மருந்துகளை அரசாங்கம் வழங்காவிட்டால், இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளும் மூடப்படும் நிலை உருவாகும் என அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் உள்ள இந்த நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு வழங்காமல் அரசு செயலற்ற கொள்கையை பின்பற்றுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்னும் ஒரு வாரத்தில் இலங்கையிலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளும் மூடப்படும் என்று தெரிவித்த அவர், நோயாளிகளுக்கு கொடுக்க மருந்து இல்லை. இந்த பிரச்னைகளை அரச அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலைமை அதிகரிக்கும் வரை நீங்கள் காத்திருக்கிறீர்களா? இது அதிகரித்தால், ஒட்டுமொத்த மருத்துவமனை அமைப்பும் முடக்கப்படும் என்று கூறிய அவர் அரசு மருத்துவமனை சேவையை அத்தியாவசிய சேவையாக்குவது பயனற்றது. மருத்துவர்கள், ஊழியர்கள், பணிக்கு வரும் வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை என்றால். நீங்கள் எப்படி வேலைக்கு சமூகமளிப்பது? என்றும் கேள்வி எழுப்பினார்.
Discussion about this post