கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள கப்பலில் 42 மில்லியன் டொலர் பெறுமதியான 22 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல், 22 ஆயிரம் மெற்றிக்தொன் விமான எரிபொருள் இறக்கப்படாது 5 நாள்களாக காத்திருக்கிறது.
இதற்கான டொலர் இதுவரை செலுத்தப்படவில்லை. டொலர் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, வெளிநாட்டு நிறுவனம் தற்போது கடனுக்கான கட்டணத்தை கோரியுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்றுமதியை அரசாங்கம் இறக்க தவறியதால், சந்தையில் டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் வரிசைகள் மேலும் நீண்டுள்ளன.
அதேவேளை, இந்த வாரம், உள்ளூர் முதன்மை எரிவாயு விநியோகஸ்தர்களான லிட்ரோ காஸ் மற்றும் லாப்ஸ் காஸ் ஆகியவை கையிருப்பு இல்லாத காரணத்தால் செயல்பாடுகளை இடைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு அலை உருவாகியுள்ள நிலையில், தற்சமயம் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு மாத்திரம் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
Discussion about this post