ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பான புலனாய்வு அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் மத்தியில் அரசுக்கான செல்வாக்கு நாளாந்தம் வீழ்ச்சியடைந்துவருவதாகவும், தீவிர ஆதரவை வெளிப்படுத்தியர்கள்கூட மாற்றுவழியை நாடுகின்றனர் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோல அரசுமீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்திக்கான ஆதரவு 17 வீதத்தால் அதிகரித்துள்ளது எனவும் புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்டுள்ளதால், அரசின் வாக்கு வங்கிக்கு ஏற்படும் தாக்கம் பற்றி தற்போதே ஒரு முடிவுக்கு வரமுடியாது எனவும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
Discussion about this post