ஈழத்தின் தொன்மையான ஆலயங்களில் ஒன்றான சுழிபுரத்தில் உள்ள பறாளாய் முருகன் ஆலயத்தைப் பௌத்த மயமாக்கும் நடவடிக்கைகள் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன என்று பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த இரகசிய முயற்சியைத் தடுத்து நிறுத்த அரசியல்வாதிகளும், தமிழ்த் தரப்புகளும் உடனடியாக ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முருகன் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தின் கீழ் நாளை பௌர்ணமி தினத்தில் பிரித் ஓதி வழிபட பௌத்த பிக்குகள் சிலர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மெல்ல மெல்ல ஆலயத்தைப் பௌத்த மயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. கதிர்காமம் கந்தன் ஆலயமும் இவ்வாறே மெல்ல மெல்ல பௌத்த மயமாக்கப்பட்டு, தற்போது அந்த ஆலயம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோயுள்ளது.
Discussion about this post