ரஷ்ய செய்திச் சேவையின் நேரடி ஒளிபரப்பில், உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகையுடன் தோன்றிய செய்தியாளரை ரஷ்யப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செய்தி நேரலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரெனப் பெண் செய்தியாளர் ஒருவர் உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகையுடன் தோன்றியுள்ளார்.
உக்ரைன் மீதான போர் ஒரு குற்றம் என்றும், ரஷ்யர்கள் போருக்கு எதிராக உள்ளனர் என்றும் அவர் வைத்திருந்த பதாகையில் எழுதப்பட்டிருந்தது.
அதையடுத்து, அரசுக்கு எதிராகச் செயற்பட்ட குற்றச்சாட்டில் மொஸ்கோ பொலிஸார் அந்தப் பெண் செய்தியாளரைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் மொஸ்கோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, ரஷ்யா உக்ரைனின் முக்கியமான நகரங்கள் மீது தொடர்ந்தும் கடும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
Discussion about this post