கோட்டபாயவுக்கு எதிராக நடத்தப்படும் #GoHomeGota என்ற சமூகவலைத்தள எதிர்ப்புப் போராட்டத்துக்கு பதிலளிக்கும் வகையில் , அரச தரப்பு ஆதரவாளர்கள் #WeAreWithGota என்ற பரப்புரையை தொடங்கியுள்ளனர்.
‘இந்த உலகம் கண்டிராத மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நாம் சந்தித்து வருகிறோம். அதன் விளைவுகளை இப்போது இலங்கை உணர்கிறது. நாம் ஒன்றுபட வேண்டும். ஒன்றாக இணைந்து போரை முடித்தோம்.
நாங்கள் ஒன்றாகத் தடுப்பூசி போட்டு கொரோனாவுக்கு எதிராகப் போராடினோம். இப்போது நாம் ஒன்றாக நின்று இந்தப் பொருளாதார நெருக்கடியை ஒன்றாக எதிர்த்துப் போராடுவோம்’ என்று கோத்தா தரப்பினர் பதிவிட்டு வருகின்றனர்.
Discussion about this post