ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாளை புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் இந்த விசேட உரையானது அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாக ஒளி மற்றும் ஒலிபரப்பு செய்யப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பிலேயே அவரது உரை அமையும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Discussion about this post