இலங்கை மத்திய வங்கி 22.27 பில்லியன் ரூபாவை இன்று திங்கட்கிழமை அச்சிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 18.7 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையிலும், பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் அரசாங்கம் தொடர்ச்சியாக பணம் அச்சிடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
அண்மையில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் அளவுக்கதிமான பணத்தாள்களை அச்சிட்டமையும் ஒரு காரணம் என்று தெரிவித்திருந்தது.
Discussion about this post