உக்ரைன் மீது படையெடுத்து கடுமையான போரை நடத்தி வரும் ரஷ்ய படைகள், கீவ் நகரின் வடமேற்கு புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிழக்குப் பகுதிகளை குறி வைத்து நேற்றிரவு முழுவதும் கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக கீவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு கீவ் நகரின் ப்ரோவெரி பகுதி மேயர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக மண்டல தலைமை நிர்வாகி ஒலெக்சி குலேபா உக்ரைன் அரச தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
வடமேற்கு நகரப் பகுதிகளான இர்பின், புச்சா, ஹேஸ்டோமெல் ஆகியவற்றின் மீது நள்ளிரவு முழுவதும் தீவிர தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருவதால்தான் தாக்குதல் தீவிரமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Discussion about this post