ஊடக தணிக்கை தமது அரசின் கொள்கையல்ல எனவும் அவற்றை மேற்பார்வை செய்வதற்கான வழிமுறையையே முன்னெடுக்க உள்ளது என்று ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக பட்டய ஊடக கற்கைக்கான நிறுவனமொன்றை ஆரம்பிப்பதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. செப்ரெம்பர் மாதமளவில் பட்டய ஊடக நிறுவனம் உருவாக்கப்படும்.
பத்திரிகைப் பேரவை சட்டத்தை திருத்த 2021ஆம் ஆண்டு அமைச்சரவை அனுமதி கிடைத்தது. பல்வேறு அமைச்சர்கள் இதை மாற்ற முயற்சி செய்தனர். அமைச்சரவை முடிவுக்கமைய மக்கள் கருத்து பெறப்பட்டதோடு 22 பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
2002 இல் குற்றவியல் சட்டத்தை நீக்க முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுத்த முடிவு ஊடகத்துறையில் வரலாற்று முக்கியமான தீர்மானமாகும். அரச தலைவர் உள்ளிட்ட சகல தரப்பும் இணைந்து ஊடகத்தை தணிக்கை செய்வது எமது முடிவல்ல, தணிக்கையன்றி மேற்பார்வையே தமது கொள்கையாகும். சிவில் அமைப்புகளுடன் இணைந்து மேற்பார்வை செய்யக்கூடிய வழிமுறையையே முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஊடக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post